
நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார். அவர் கூறியதாவது, மத்திய, மாநில அரசுகள் டீம் இந்தியாவை போல இணைந்து செயல்பட்டால் எந்த இலக்கும் சாத்தியமற்றது அல்ல. ஒவ்வொரு மாநிலமும் வளர்ச்சி அடைந்து இருக்கும்போது பாரதமும் வளர்ச்சி அடைந்ததாக இருக்கும்.
இதுவே 140 கோடி மக்களின் விருப்பம். நாம் வளர்ச்சியின் வேகத்தை அதிகரிக்க வேண்டும். உலக தரத்திற்கு இணையாக ஒவ்வொரு மாநிலத்திற்கும் குறைந்தது ஒரு சுற்றுலா தலத்தையாவது உருவாக்க வேண்டும் என கூறியுள்ளார்.