சென்னையில் உள்ள கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானம் ரூ. ரூ 12,351 கோடி வாடகை பாக்கி வைத்ததால் அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். இந்த இடம் சீல் வைக்கப்பட்டதால் தமிழக அரசு அதனை என்னவாக மாற்றும் என்று எதிர்பார்ப்போம் பெரிய அளவில் இருந்த நிலையில் தற்போது அதுகுறித்த அரசாணையை வெளியிட்டுள்ளது. அதன்படி கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானம் பசுமை பூங்காவாக அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தோட்டக்கலைத்துறை சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மிகச்சிறந்த பூங்கா மற்றும் பசுமை வெளி உருவாக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு அரசு பெரிய அளவிலான பூங்காவை உருவாக்குவது சுற்றுச்சூழல் நிலைத்தன்மை பொது சுகாதாரத்தை மேம்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.