
சென்னை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தற்போது பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனால் திருவள்ளூர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி, சதீஷ் சென்னை மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சதீஷ்குமார் மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக சதீஷ்குமார் தர்பூசணி பழத்தில் ரசாயனம் கலந்தது தொடர்பாக ஒரு வீடியோ வெளியிட்ட நிலையில் அது சர்ச்சையாக மாறியது. மேலும் இதைத் தொடர்ந்து இன்று அவரை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.