
சென்னையில் கிண்டி, சைதாப்பேட்டை, நந்தனம், தி.நகர், நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், ஆயிரம் விளக்கு, எழும்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஏற்கெனவே, சென்னையில் வெள்ள நீர் வடியாத நிலையில், மீண்டும் மழை பெய்வதால் மக்கள் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதேசமயம், மீட்புப்பணி, நிவாரணப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.