அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் டெல்லிக்கு சென்றார். அங்கு புதிதாக கட்டியுள்ள அதிமுக அலுவலகத்தை பார்வையிட்ட எடப்பாடி பழனிச்சாமி மத்திய அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசி உள்ளார். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இருவரும் பேசிக் கொண்டனர். அதன்பிறகு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் டெல்லிக்கு சென்று அமைச்சரை சந்திக்க போவதாக கூறினார்.

இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லிக்கு சென்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே அதிமுகவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கம் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே மோதல் போக்கு நிலவுகிறது. தற்போது செங்கோட்டையன் டெல்லிக்கு சென்று மத்திய அமைச்சரை சந்தித்தது பற்றி தான் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.