கடந்த சில நாட்களாகவே உலகின் பல பகுதிகளிலும் தினந்தோறும் நிலநடுக்கம் சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் பப்புவா நியூ கினியாவில் சற்று நேரத்திற்கு முன்பு மிகப் பெரிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மோர்ஸ்பிதுறைமுகத்திலிருந்து 443 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதனால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விவரம் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.