
தமிழகத்தில் இன்று பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களின் புனித பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை இன்று சனிக்கிழமை ஜூன் 7-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளை மத்திய அரசாங்கம் பொது விடுமுறையாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று தமிழகத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பொது விடுமுறை என்பதால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை. மேலும் இதே போன்று மத்திய அரசு அலுவலகங்கள், தபால் அலுவலகங்கள் மற்றும் வங்கிகளுக்கும் விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.