சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த 3 நாட்களாக உயர்ந்த நிலையில் நேற்று எந்த மாற்றமும் இன்றி இருந்தது. இந்நிலையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது.

அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1200 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 71,840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் பிறகு ஒரு கிராம் 8980 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 9796 ரூபாய்க்கும், ஒரு சவரன் 78368 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இன்று வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் 117 ரூபாய்க்கும், ஒரு சவரன் 117000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.