நாம் தமிழர் கட்சியில் இருந்து சமீப காலமாக ஏராளமான நிர்வாகிகள் விலகி வருகிறார்கள். குறிப்பாக மாவட்ட செயலாளர்கள், கடந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உட்பட பலர் அடுத்தடுத்து விலகி வருகிறார்கள். அவர்கள் சீமான் மீதுள்ள அதிருப்தி காரணமாக விலகுவதாக கூறுகிறார்கள். நேற்று கூட மாவட்ட செயலாளர் ஒருவர் கட்சியிலிருந்து விலகினார். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி துணைத் தலைவர் முருகன் தற்போது நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாளும் அந்தக் கட்சியிலிருந்து விலகியதாக கூறப்படுகிறது. அதாவது அடுத்த மாதம் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் காளியம்மாளின் பெயர் சமூக செயற்பாட்டாளர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக காளியம்மாளிடம் கேட்கும் போது விரைவில் அது பற்றி சொல்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் நாம் தமிழர் கட்சியிலிருந்து காளியம்மாலும் விலகியது உறுதியானதாக கூறப்படும் நிலையில் தற்போது முக்கிய நிர்வாகி ஒருவர் விலகியது சீமானுக்கு அடுத்தடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது