
திமுக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அய்யாவு உடல் நலக்குறைவினால் காலமானார். திமுக கட்சியின் சட்டத்துறை இணைச் செயலாளர் கே.எஸ். ரவிச்சந்திரனின் சகோதரர் அய்யாவு என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் அனைத்து வெளியூர் பயணங்களிலும் உடன் இருந்தவர்.
இவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் தண்டையார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் அய்யாவு உடல் இறுதி சடங்கிற்காக வைக்கப்படும் நிலையில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றன.