கடலூரில் உள்ள என்எல்சி அனல் மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது இரண்டாவது அலகில் உள்ள டிரான்ஸ்பார்மர் வெடித்ததால் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த தீ விபத்தால் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எறிந்து நாசமானதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த அலகிலிருந்து தான் வெளி மாநிலங்களுக்கு மின்விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.