உத்திர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி முதல்முறையாக போட்டியிட்டார். அத்தொகுதியில் வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்தது முதல் ராகுல் காந்தி தொடர்ந்து முன்னிலை வகித்தார். முடிவில் 6.60 லட்சத்துக்கும் மேல் வாக்குகள் பெற்று ராகுல் காந்தி வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தினேஷ் பிரதாப் சிங் தோல்வியடைந்தார்