
தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் விஷசாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பாஜக மற்றும் பாமக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிமன்றம் வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. மேலும் இது தமிழக அரசுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.