கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்ந்து அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த பேரிழப்பைச் சுற்றி போலீசார் தொடர்ந்து விசாரணையும் கைது நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, பிரசாரக் கூட்டத்திற்கான கொடிகம்பம், பிளக்ஸ் பேனர்கள் உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்த கரூர் நகர பொறுப்பாளர் பவுன்ராஜ் அதிகாலையில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு தங்குவதற்கு பவுன்ராஜ் அடைக்கலம் கொடுத்ததாக போலீஸ் விசாரணையில் வெளிப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பவுன்ராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கரூர் துயரச் சம்பவத்தில் தவெக நிர்வாகிகள் ஒருவருக்குப் பிறகு ஒருவர் கைது செய்யப்படுவதால், அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பு நிலவுகிறது.