
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த மாதம் திரையரங்குகளில் ரிலீசாக இருக்கிறது. இந்த படத்தின் டிரைலர் போன்றவைகள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படகு குழுவினர் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் தற்போது அந்த படத்தின் தொகுப்பாளர் நிஷாத் யூசூப் திடீரென காலமானார். அவருக்கு 43 வயது ஆகிறது. இவர் கொச்சியில் உள்ள அவர் வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் இறப்பிற்கான காரணம் குறித்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இவர் சூர்யா 44 திரைப்படத்திலும் பணிபுரிந்து வரும் நிலையில் இவருடைய மரணத்திற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றார்கள்.