அடுத்த வருடம் ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருக்கும் நிலையில் மெகா ஏலம் இந்த மாதத்தின் இறுதியில் நடைபெற உள்ளது. முன்னதாக ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்க வைத்த வீரர்கள் குறித்து அறிவிப்பை வெளியிட்டது. இந்நிலையில் ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற இருக்கும் நிலையில் அடுத்த வருடம் ஐபிஎல் போட்டி நடைபெறும் தேதி குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி அடுத்த வருடம் மார்ச் 14ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் நிலையில் மே மாதம் 25ஆம் தேதி போட்டிகள் முடிவடையும். இதற்கான முழு அட்டவணை விரைவில் வெளியிடப்பட உள்ளது. மேலும் 2026 ஆம் ஆண்டில் ஐபிஎல் தொடர் மார்ச் 15 முதல் மே 31ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், 2027 ஆம் ஆண்டில் ஐபிஎல் தொடர் மார்ச் 14ஆம் தேதி முதல் மே 30ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.