அடுத்த வருடம் ஐபிஎல் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்கள் அணியில் தக்க வைத்த வீரர்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி UNCAPPED PLAYER விதிமுறையில் எம் எஸ் தோனியை 4 கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே தக்க வைத்துள்ளது.

இதேபோன்று 18 கோடி ரூபாய்க்கு ஜடேஜாவையும், 12 கோடி ரூபாய்க்கு சிவம் துபே, 18 கோடி ரூபாய்க்கு ருதுராஜ் கெய்க்வாட்டையும், மதிஷா பத்திரனாவை 13 கோடி ரூபாய்க்கும் சிஎஸ்கே தக்க வைத்துள்ளது. மேலும் சிஎஸ்கே நிர்வாகம் இந்த 5 வீரர்களை தக்க வைத்துள்ளது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அனிருத் இசையமைப்பில் வீடியோ வடிவில் இதனை வெளியிட்டுள்ளனர்.