பாகிஸ்தானின் ஃபெரோஸ்பூர் எல்லைப் பகுதியில், இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற ஒரு பாகிஸ்தானியரை பிஎஸ்எஃப் (BSF) வீரர்கள் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இருளின் மறைவில், சர்வதேச எல்லையை (IB) கடந்து பாதுகாப்பு வேலியை நோக்கி நகர்ந்த அந்த நபர், பிஎஸ்எஃப் வீரர்களால் எச்சரிக்கை செய்யப்பட்டும், தொடர்ந்து முன்னேறியதால், அவரை சுட்டு கொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்குமுன், பஞ்சாப் மாநிலத்தின் குருதாஸ்பூர் மாவட்டத்திலும், முகமது உசேன் என்ற பாகிஸ்தானியர் ஊடுருவ முயன்றதாக கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து பாகிஸ்தான் நாணயங்கள் மற்றும் தேசிய அடையாள அட்டை கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேபோன்று, ராஜஸ்தான் எல்லையில் ஒரு பாகிஸ்தான் ரேஞ்சரும், உளவு நோக்கங்களுடன் நுழைந்திருக்கலாம் என சந்தேகித்து, பிஎஸ்எஃப் அவரிடம் விசாரணைநடத்தி வருகின்றனர். தொடர்ந்து நடைபெறும் இத்தகைய முயற்சிகள், இந்தியாவின் எல்லை பாதுகாப்பு அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன என்பதை வெளிக்காட்டுகின்றன.