உலகப் புகழ்பெற்ற தபேலா இசை கலைஞர் ஜாகிர் உசேன். இவருக்கு 75 வயது ஆகும் நிலையில் உடல்நல குறைவினால் இன்று காலமானார். அதாவது அமெரிக்காவில் உள்ள ஒரு மருத்துவமனையில் இதயம் தொடர்பான பிரச்சனையின் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துவிட்டார். இவருடைய மறைவால் இந்திய திரை உலகினரும் உலக அளவில் உள்ள ரசிகர்களும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இந்துஸ்தான் இசை கலைஞர் ஆன ஜாகிர் உசேன் பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் ஆகிய விருதுகளை பெற்றுள்ளார். இவர் கிராமி விருதையும் வென்றுள்ளார். மேலும் பன்முகத் திறமைகளை கொண்ட ஜாகிர் உசேன் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.