பிரபல நடிகர் பிரபாஸ் தற்போது கல்கி 2898 ஏடி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நாக் அஸ்வின் இயக்குகிறார். இந்த படம் அறிவியல் கதைக்களத்தில் உருவாகும் நிலையில் நடிகர் அமிதாப் பச்சன், நடிகை திஷா பதானி, தீபிகா படுகோனே, அன்னா பென் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் நடிகர் பிரபாஸ் உடன் சேர்ந்து புஜ்ஜி என்ற காரும் படத்தில் நடித்துள்ளது.

இந்த கார் சமீபத்தில் சென்னை சுற்றி வந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த படம் வருகின்ற ஜூன் மாதம் 27ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் தற்போது கல்கி படத்தின் டிரைலர் வீடியோவை பட குழுவினர் வெளியீட்டுள்ளனர்.