தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் கோடை வெயில் மக்களை சுட்டெரித்து கொண்டிருக்கும் சூழலில் மக்களை சற்று குளிர்ச்சி ஊட்டும் விதமாக கடந்த ஒரு வாரமாக பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வருகின்றமே ஆறாம் தேதி வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு திசையில் அவரது மத்திய வங்க கடலில் மே எட்டாம் தேதி புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக இன்று ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், திருவண்ணாமலை, மதுரை, திருப்பத்தூர் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கும் என எச்சரித்துள்ளது.