தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக தமிழக சட்டசபையில் இயற்றப்பட்ட தீர்மானத்திற்கும் அவர் வரவேற்பு கொடுத்த நிலையில் மத்திய அரசு உடனடியாக அந்த தீர்மானத்தை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் தற்போது வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்துள்ளார்‌. மேலும் இந்த மசோதாவுக்கு எதிராக ஏற்கனவே காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகள் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் தற்போது விஜயும் வழக்கு தொடர்ந்துள்ளார்‌