டெல்லி உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சந்திர சூட் இருக்கிறார். இவருடைய பதவிக்காலம் நவம்பர் 10-ம் தேதியோடு முடிவடையும் நிலையில் ஓய்வு பெற இருக்கிறார். இதன் காரணமாக உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் சந்திர சூட் சஞ்சீவ் கண்ணாவை ‌ பரிந்துரை செய்திருந்தார்.

இந்நிலையில் தற்போது குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சஞ்சீவ் கண்ணாவை ‌ புதிய தலைமை நீதிபதியாக நியமித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இவர் உச்ச நீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இவர்  வருகிற நவம்பர் மாதம் 11ஆம் தேதி புதிய நீதிபதியாக பதவியேற்கிறார்.