இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏற்பட்ட கடும் பொருளாதார வீழ்ச்சியால் ராஜபக்சே ஆட்சி கவிழ்ந்தது. அதன் பிறகு நாடாளுமன்ற மூலமாக ரணில் விக்ரமசிங்க புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் நேற்று இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மும்முனை போட்டிகள் நிலவிய நிலையில் மொத்தம் உள்ள 22 மாவட்டங்களில் 18 மாவட்டங்களில் அனுர குமார திசநாயக்க வெற்றி பெற்ற நிலையில் மீதமுள்ள மாவட்டங்களிலும் அவரே முன்னிலை வகித்தார். ஏற்கனவே 50 சதவீத வாக்குகளை தாண்டிவிட்டால் வெற்றி உறுதியாகி விடும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் காலையிலேயே அனுர குமார திசநாயக்க வெற்றி பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

அதே சமயத்தில் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாசா கடும் பின்னடைவை சந்தித்தனர். மேலும் அதிபர் தேர்தலில் கடும் இழுபறி நிலவிய நிலையில் இரண்டாவதாக விருப்ப வாக்குகள் நடைபெற்றது. மேலும் இதன் அடிப்படையில் தற்போது தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அனுர குமார திசநாயக்க வெற்றி பெற்றதாக  தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் வரலாற்றில் முதல் முறையாக இடதுசாரிகள் ஆட்சி இலங்கையில் அமைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.