இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு போர் நடைபெற்றது. அதாவது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததால் ஆபரேஷன் சிந்தூர் மூலமாக இந்தியா பதிலடி கொடுத்தது. இந்தியா பயங்கரவாத முகாம்களை மட்டுமே குறிவைத்து அழித்த நிலையில் பாகிஸ்தான் இந்தியா மீது மூன்று நாட்களாக தாக்குதல் நடத்தியது. பின்னர் இரு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கு உட்பட்டு போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்ததாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.

இதனை மத்திய அரசாங்கம் உறுதிப்படுத்திய நிலையில் இன்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் போர் நிறுத்தத்திற்கான காரணம் குறித்து பேசி உள்ளார். அதாவது அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனும் போரை நிறுத்தாவிடில் இனி அமெரிக்கா வர்த்தகம் செய்யாது என்று கூறியதால் தான் இருவரும் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.