இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன் என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் விளக்கமளித்துள்ளார்.

இந்தியா கூட்டணியில் இருந்து பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் விலகியிருந்தார். இந்நிலையில் தான் விலகியதற்கு என்ன காரணம் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் பாட்னாவில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சில முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதால் இந்தியா கூட்டணியில் இருந்து தான் விலகினேன். எதிர்க் கட்சிகளின் கூட்டணிக்கு வேறு பெயரை வைக்க கூறினேன். பெயரை மாற்றுவதற்கு நான் பலமுறை வலியுறுத்தினேன். ஆனால் அவர்கள் அந்த பெயரை முடிவு செய்தனர்.

இதுபோன்ற சில முரண்பாடுகள் ஏற்பட்டதால் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறினேன். எந்த கட்சி எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பதை இதுவரை முடிவு செய்யவில்லை. கூட்டணியில் இருந்து விலகியதற்கு தொகுதி பங்கீடு சிக்கல் தான் காரணம். பீகார் மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன் என தெரிவித்துள்ளார்.

இந்தியா கூட்டணிக்கு பெயரிடுவதிலேயே நிதிஷ் குமாருக்கும், இந்தியா கூட்டணி கட்சிக்கும் இடையே முரண்பாடு இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. நிதிஷ் குமாரை பொறுத்தவரை ஆரம்பத்தில் இருந்து பல்வேறு கட்சிகளுடனும் அவர் முரண்பாட்டில் இருக்கிறார். டெல்லியில் நடந்த பொதுக்கூட்டத்தின் போது ஹிந்தியில் பேச திமுக தலைவர்களை வலியுறுத்தியது. இந்தி குறித்து அவர் குறித்த கருத்துக்கள் முரண்பாடாக இருந்தது. மம்தா பானர்ஜி பெயரை ராகுல் காந்தி முன்னெடுத்தபோது, அதன் ஒருங்கிணைப்பாளராக அவர் ராகுல் காந்தி முன்னெடுத்த போது அதற்கு நிதிஷ்குமார் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது என பல்வேறு விஷயங்களில் அவர் முரண்பாடு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.