உலகம் முழுவதும் 300 கோடிக்கும் அதிகமான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்துகிறார்கள். இது தகவல் தொடர்புக்கு பயனுள்ளதாக இருக்கும் நிலையில் இந்தியாவில் வாட்ஸ் அப் செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதாவது இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டம் (2021) விதிகளுக்கு whatsapp நிறுவனம் கட்டுப்பட மறுப்பதாகவும், எனவே இந்தியாவில் அதன் செயல்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது.

கேரளாவைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர் whatsapp செயலியை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிடுமாறு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மேலும் அந்த மனுவை விசாரித்த நீதிபதி இது விசாரணைக்கு உகந்த மனு கிடையாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கினார்.