அதிமுகவில் இருந்து கோவை மாவட்ட எம்.ஜி.ஆர் அணி செயலாளர் சந்திரசேகர் விலகியுள்ளார். தனிப்பட்ட வேலை காரணமாக தன்னால் கட்சி பணிகளில் போதிய கவனம் செலுத்த முடியாத சூழல் உள்ளது என்றும், ஆதலால் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் வழங்குவதாக சந்திரசேகர் அறிவித்துள்ளார். அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவின் வெளியீட்டாளராகவும் சந்திரசேகர் இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.