சிவகங்கை மாவட்டம் திருபுவனம் பகுதியில் அஜித்குமார் என்ற வாலிபர் நகை திருட்டு சந்தேக வழக்கில் போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்ட அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

நேற்று முதல்வர் ஸ்டாலின் அஜித்குமார் தாயார் மற்றும் தம்பி ஆகியோருக்கு ஆறுதல் சொல்லிய நிலையில் இந்த விவகாரத்திற்காக மன்னிப்பும் கோரினார். அதன்பிறகு அஜித் குமாரின் தம்பி ஐடிஐ எலக்ட்ரிகல் படித்துள்ள நிலையில் அவருக்கு படிப்புக்கு தகுந்தவாறு அரசு வேலை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்திருந்தார்.

அந்த வகையில் தற்போது அவருக்கு அரசு பணிக்கான ஆணையை அமைச்சர் பெரிய கருப்பை நேரில் சென்று வழங்கி உள்ளார். மேலும் அஜித்குமாரின் சகோதரர் நவீன் குமாருக்கு அரசு பணி வழங்கப்படும் என நேற்று முதல்வர் அறிவித்திருந்த நிலையில் இன்றே பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.