புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்தார். வழக்கு விசாரணையை தீவிர படுத்தவும் வழக்கில் தொடர்புடையவர்களை விரைவில் கைது செய்யவும் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது என டிஜிபி விளக்கம் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு வெள்ளனூர் காவல் நிலையத்தில் விசாரணையில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.