மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஜால்கோவானில் பயங்கர ரயில் விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக வதந்தி பரவியது. இதன் காரணமாக ரயிலில் இருந்து பயணிகள் அடுத்தடுத்து குதிக்க 11 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். பயணிகள் பதட்டத்தில் ரயிலில் இருந்து குதித்த நிலையில் மற்றொரு ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

அதாவது கீழே குதித்த பயணிகள் மீது அந்த வழியாக வந்த கர்நாடக எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த இடத்தில் மீட்பு பணிகள் என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.