அமெரிக்க நாட்டின் புதிய அதிபராக டொனால்டு டிரம்ப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். உலகமே எதிர்பார்த்த அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி வாகை சூடிய நிலையில் தற்போது தன்னுடைய ஆதரவாளர்கள் மத்தியில் அவர் பேசி வருகிறார். அவர் பல்வேறு விஷயங்களை பேசுகிறார். குறிப்பாக இனி அமெரிக்காவில் பொற்கால ஆட்சி நடைபெறும் என்றும் அமெரிக்கா அமெரிக்கர்களுக்கு மட்டும்தான் என்று கூறியுள்ளார். அதன்பிறகு சட்ட விரோதமாக அமெரிக்காவில் குடியிரயேறுபவர்கள் தடுத்து நிறுத்தப்படுவார்கள். எல்லை பிரச்சினைகளுக்கு விரைவில் முடிவு கட்டப்படும் என்றார். இந்நிலையில் தற்போது தான் அதிபராக பொறுப்பேற்றதால் இனி போர்கள் அனைத்தும் நிறுத்தப்படும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.

நான் போரை தொடங்குவேன் என்று அவர்கள் கூறிக் கொண்டிருந்தார்கள். ஆனால் நான் எந்த ஒரு போரையும் தொடங்கப் போவது கிடையாது. மேலும் அனைத்து போர்களையும் நிறுத்தப் போகிறேன் என்று கூறினார். ஏற்கனவே இஸ்ரேல் மற்றும் கமாஸ் இடையே நடைபெற்று வரும் போரில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவு கொடுத்து வரும் நிலையில் உக்ரைன் மற்றும் ரஷ்யா போரில் உக்ரைனுக்கு ஆதரவு கொடுக்கிறது. ‌ தற்போது அதிபர் டிரம்ப் போர்கள் நிறுத்தப்படும் என்று கூறியதால் எந்த போரை அவர் நிறுத்துவார் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் இரு போர்களையும் நிறுத்துவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.