தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவர் தற்போது மண்ணாங்கட்டி மற்றும் டெஸ்ட் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். அதன்பிறகு கன்னடத்தில் எஸ் நடிக்கும் டாக்சிக் படத்தில் நடித்து வருகிறார். இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இரு மகன்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் நயன்தாராவின் எக்ஸ் கணக்கை ஹேக்கர்கள் ஹேக் செய்துவிட்டதாக தற்போது அவர் தன் வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தன்னுடைய வலைதள பக்கத்தில் தேவையில்லாமல் வரும் பதிவுகளை கண்டு கொள்ள வேண்டாம் என்று நயன்தாரா பதிவிட்டுள்ளார்.

இதேபோன்று பிரபல நடிகர் சிம்புவின் எக்ஸ் பக்கமும் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது கிரிப்டோ கரன்சி பயன்படுத்துவீர்களா என்று வினோதமாக அவர்கள் கணக்கிலிருந்து பயனர்களிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு சில ரசிகர்கள் ஆம் என்று பதிலளித்து இருந்தார்கள். சம்பந்தமில்லாமல் சிம்புவின் ஐடியில் இருந்து இப்படி ஒரு பதிவு வெளியானதால் அவருடைய கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதே போன்று நடிகை நயன்தாராவின் எக்ஸ் பக்கத்தையும் ஹேக் செய்துள்ளனர். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.