தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிம்பு. இவர் தற்போது தக் லைஃப் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் கொரோனா குமார் படம் தொடர்பாக நடிகர் சிம்பு பக்கம் வேல் நிறுவனத்திற்கும் இடையே பிரச்சனை இருந்தது. அதாவது நடிகர் சிம்பு கொரோனா குமார் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி அட்வான்ஸ் வாங்கிவிட்டு அந்த படத்தில் நடிக்காமல் இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் புகார் கொடுத்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் சிம்பு 1 கோடி ரூபாய் கட்ட வேண்டுமென்று உத்தரவிட்டது.

தற்போது சிம்புவுக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையேயான பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்டது. மேலும் இதன் காரணமாக சிம்பு செலுத்திய ஒரு கோடி ரூபாய் பணத்தை வட்டியுடன் சேர்த்து 1.4 கோடி ஆக அவருக்கு திருப்பி கொடுக்க வேண்டும் என்று பதிவாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.