
பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் சயிப் அலிகான். இவருடைய வீட்டிற்குள் இன்று அதிகாலை 2:30 மணியளவில் திருடன் ஒருவன் நுழைந்த நிலையில் அதனை நடிகர் சயிப் அலிகான் பார்த்துள்ளார். அந்த திருடனை அவர் பிடிக்க முயன்றதால் கத்தியால் அவரை 6 முறை குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் பலத்த காயம் அடைந்த சயிப் அலிகான் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட இருக்கிறது.
இந்த சம்பவம் பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அந்த நேரத்தில் வெளியே இருந்து யாரும் வீட்டிற்கும் செல்லவில்லை. அதாவது வீட்டுக்குள் பணிப்பெண்ணிடம் ஒருவர் தகராறு செய்த நிலையில் அதனை தடுத்து நிறுத்தி தட்டி கேட்டபோது நடிகருக்கு கத்திக்குத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இதன் காரணமாக வீட்டில் இருந்த யாரோ தான் நடிகரை கத்தியால் குத்தி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.