சமாதான கூட்டத்தில் தீர்வு ஏற்பட்டால் அனைத்து சமூக மக்கள் அடங்கிய குழு அமைப்பு ஜல்லிக்கட்டு நடத்தலாம் என்று ஐகோர்ட் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

அவனியாபுரத்தைச் சேர்ந்த அனைத்து சமூக மக்களையும் இணைத்து ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என ஐகோர்ட் மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்த போது, அவனியாபுரத்தை சேர்ந்த அனைத்து சமுதாய மக்களையும் இணைத்து நாளை ஆட்சியர் தலைமையில் சமாதான கூட்டம் நடத்த வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சமாதான கூட்டத்தில் தீர்வு ஏற்பட்டால் அனைத்து சமூக மக்கள் அடங்கிய குழு அமைத்து ஜல்லிக்கட்டு நடத்தலாம். தீர்வு கிடைக்காவிடில் ஆதி திராவிட நல இணை இயக்குனரை இணைத்து மாவட்ட நிர்வாகம் ஜல்லிக்கட்டு நடத்தலாம் என கோர்ட் தெரிவித்துள்ளது.