
உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று மதுரை அவனியாபுரத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்றது. இந்த போட்டியில் 1100 காளைகள் மற்றும் 900 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்ட நிலையில் காளை முதல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது.
இந்நிலையில் தற்போது 19 காளை மாடுகளை அடக்கி முதல் பரிசான காரை திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த கார்த்தி வென்றுள்ளார். இதைத்தொடர்ந்து 15 காளைகளை அடக்கிய அரவிந்த் திவாகர் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். மேலும் 13 காளைகளை அடக்கி முரளிதரன் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.