கேரளாவில் கடந்த டிசம்பர் மாதம் வருமான வரித்துறையினர்  பிரபல மலையாள சினிமா தயாரிப்பாளர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் திடீர் சோதனை நடத்தினர். அதன் படி  ஆண்டனி பெரும்பாவூர், ஆன்டோ ஜோசப், லிஸ்டின் ஸ்டீபன், நடிகரும், தயாரிப்பாளருமான பிரித்விராஜ் உட்பட தயாரிப்பாளர்களின் வீடுகளில் சோதனை நடத்தியுள்ளனர். இது குறித்த விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. அந்த வகையில் மலையாள சினிமாவில் ரூ.225 கோடி  கருப்பு பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதன் மூலமாக வருமான வரித்துறைக்கு ரூ.72 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பிரபல தயாரிப்பாளர்கள் வெளிநாடுகளில் சொத்துகள் வாங்கி குவித்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களது வெளிநாட்டு வங்கி கணக்குகள் பற்றியும் வருமான வரித்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் மலையாள படங்களை வெளிநாடுகளுக்கு விநியோகித்தன் மூலமாக பெரும் மோசடி செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.