பிக் பாஸில் டாஸ்க் வழக்கம் போல கொடுக்கப்பட்டது. பிக் பாஸ் வீடு முழுமையாக ஓட்டலாக மாறி உள்ளதோடு அங்கிருந்தவர்கள் இரு குழுக்களாக பிரிந்துள்ளனர். அதாவது பெண்கள் அணியை சேர்ந்தவர் ஓட்டலின் ஊழியராக மாறி ஆண்கள் அணியை கவனித்துக் கொள்ள வேண்டும்.

இந்த போட்டியில் பெண்கள் அணி ஆண்களை சரியாக கவனித்துக் கொள்ளவில்லை என்றும் அவமானப்படுத்தி விட்டார்கள் என்றும் நேர்மறையான கருத்துக்கள் ஆண்கள் அணி முன்வைத்தனர். இதன் காரணமாக பெண்கள் அணியில் மேனேஜராக இருக்கும் பவித்ரா ஜனனி மாற்றப்படுவார் என்று கூறப்பட்டது. இதைக் கேட்டு பவித்ரா ஜனனி கதறி அழுதார். மேலும் இது குறித்து வீடியோ வைரலாகி வருகிறது.