
தெலுங்கு சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வருபவர் தில்ராஜு. இவர் தமிழில் விஜய் நடித்த வாரிசு படத்தை தயாரித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரீட்சயமான ஒருவராக மாறினார். தில் ராஜு தயாரிப்பில் சமந்தா நடித்த சாகுந்தலம் திரைப்படம் அண்மையில் வெளியாகி படுதோல்வியை சந்தித்தது. இந்தப் படத்தால் தயாரிப்பாளருக்கு பெருமளவு நஷ்டம் ஏற்பட்டதாக தகவல் வெளியான நிலையில் ஒரு பேட்டியில் தில் ராஜூ அதை உறுதிப்படுத்தியுள்ளார். அதாவது தன்னுடைய 25 வருட சினிமா கேரியரில் இது மிகப்பெரிய தோல்வி படம் என்று கூறி இருக்கிறார்.
நான் தயாரித்த 50 படங்களில் இதுவரை 4 அல்லது 5 படங்கள்தான் தோல்வி. சகுந்தலம் படம் சமீபத்தில் மிகப்பெரிய தோல்வி. இதை நான் ஒப்புக்கொள்கிறேன். ரசிகர்களுக்கு பிடித்தால் படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகும். ஒருவேளை பிடிக்கவில்லை என்றால் படம் தோல்வியாகும் என்று கூறியுள்ளார். மேலும் சாக்ந்தலம் படம் 60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில் வெறும் 10 கோடி மட்டும் தான் வசூலித்ததாக கூறப்படுகிறது.