நாடு முழுவதும் இன்று காலை முதல் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அமோக வெற்றி பெற்றுள்ளார்.

மேலும் ஏற்கனவே காங்கிரஸின் கோட்டையாக கருதப்படும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் ரேபேலி தொகுதியிலும் ராகுல் காந்தி வெற்றி பெற்ற நிலையில் தற்போது வயநாடு தொகுதியிலும் அவர் வெற்றி வாகை சூடியுள்ளார். மேலும் இந்த வெற்றியை இந்தியா கூட்டணி தொண்டர்கள் கொண்டாடி வருகிறார்கள்.