தமிழ் சினிமாவில் பிரபலமான பின்னனி பாடகி வாணி ஜெயராம் (78). இவர் சென்னையில் சற்று முன் உயிரிழந்தார். கடந்த 1974-ம் ஆண்டு வெளியான தீர்க்க சுமங்கலி என்ற படத்தின் மூலம் திரையுலகுக்கு பாடகியாக அறிமுகமானார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் படுக்கையறையில் இருந்து நெற்றியில் காயங்களுடன் சடலமாக வாணி ஜெயராம் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் படுக்கையறையில் கீழே விழுந்ததில் வாணிஜெயராமுக்கு நெற்றியில் அடிபட்டு உயிரிழந்திருக்கலாம் என போலீசார் முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர். இவர் தமிழ் தெலுங்கு கன்னட மொழி உள்ளிட்ட மொழிகளில் பத்தாயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடி உள்ள நிலையில் இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இந்த வருடம் ஒன்றிய அரசின் உயரிய விருதான பத்மபூஷன் விருதையும் வாணி ஜெயராம் பெற்றார். இவர் வீட்டின் படுக்கை அறையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.