
தர்மசாலா HPCA மைதானத்தில் இன்று பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கிடையிலான ஐபிஎல் போட்டி, பாதுகாப்பு காரணங்களால் திடீரென ரத்து செய்யப்பட்டது. போட்டி தொடக்கத்தில் பஞ்சாப் அணி சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த நிலையில், மைதான விளக்குகள் திடீரென அணைய தொடங்கின.
மின்னணு கோளாறு என முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், பின்னர் பாகிஸ்தானின் தாக்குதல்களை அடுத்து ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஹிமாச்சலப் பிரதேசத்தில் அதிகரித்த பாதுகாப்பு பதற்றம் தான் காரணம் என அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்குப் பதிலடி அளிக்கும் வகையில் பாகிஸ்தான் ஆயுதப்படைகள் வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் பல பகுதிகளை ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளால் குறிவைத்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
IPL Chairman requesting fans to leave the Dharamshala Stadium. pic.twitter.com/NhX03h0Ys3
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 8, 2025
“>
ஜம்முவுக்கு அருகிலுள்ள தர்மசாலா பகுதி பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குள்ளாக இருக்கலாம் என்பதால், பாதுகாப்பு அமைப்புகள் BCCI-யுடன் ஆலோசனை நடத்தி போட்டியை ரத்து செய்தன. இந்தத் தீர்மானம் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
BCCI தரப்பில், ரசிகர்கள் மற்றும் வீரர்களின் பாதுகாப்பே முதல் முக்கியத்துவம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சில விளையாட்டு மைதானங்கள் காவல்துறையின் பலத்த பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.
தற்போதைய சூழ்நிலையை பொறுத்து, விரைவில் மாற்றீட்டு தேதி குறித்து அறிவிப்புகள் வெளியாகும் என தெரிகிறது. IPL தொடரில் இதுபோன்ற பாதுகாப்பு சிக்கல்கள் வருவதை தடுக்கும் வகையில் கூடுதல் முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.