உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக விழா, வருகிற 22-ம் தேதி பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த கோவிலின் சிறப்பு, கட்டுமான பணிகள், விழா ஏற்பாடுகள், பக்தர்களின் காணிக்கை தொடர்பான பல்வேறு நேர்மறையான செய்திகள் வெளியானவண்ணம் உள்ளன.  இந்நிலையில் ராமர் கோவில் திறப்பு விழாவின் போது சைபர் குற்றவாளிகள் மோசடியில் ஈடுபட வாய்ப்புள்ளதாக சைபர் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

அயோத்தி ராமரின் நேரடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பெற லிங்கை கிளிக் செய்யுமாறு உங்கள் மொபைலுக்கு மெசேஜ் வர வாய்ப்புள்ளது. அதை கிளிக் செய்தால் போன் ஹேக் செய்யப்பட்டு வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்படும். எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.