தெலுங்கு சினிமாவின் பிரபலமான நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா. இவர் கடந்த ஜூன் 10ஆம் தேதி அன்று தனது 65 ஆவது பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடினார்.

தெலுங்கு திரையுலகில் நூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த பாலகிருஷ்ணா தனது 65 ஆவது பிறந்தநாளை ஆயிரக்கணக்கான ரசிகர்களுடன் ஆரவாரத்துடன் கொண்டாடினார்.

இவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் வெளியான வீடியோ ஒன்றில் நடிகர் பாலகிருஷ்ணா, தங்க கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட மிக உயரமான வெள்ளை மற்றும் நீல நிற கேக்கை வெட்டுவதற்கு முன்பு தன்னுடைய NBK பாணியில் காற்றில் கத்தியை சுழற்றி வீசி ஸ்டைலாக கேக்கை வெட்டினார்.

மேலும் இவர் தனது பிறந்தநாளன்று புற்றுநோய் மருத்துவமனைக்கு சென்று அங்குள்ள ரசிகர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவர் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் இடையே தண்ணீர் பாட்டிலை தனது ஸ்டைலில் மேலே தூக்கிப்போட்டு குடித்தார்.

இதனை சுற்றி இருந்த ரசிகர்கள் கத்தி கூச்சலிட்டு ஆரவாரம் செய்தனர். இது குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அவரது ரசிகர்கள் பலரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.