தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத் தேர்வு முடிவுகள் முடிவடைந்த நிலையில் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான துறைகளை தேர்ந்தெடு த்து வருகிறார்கள். இதற்காக கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு ஒப்பிடும்போது இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளை விட கலை அறிவியல் கல்லூரிகளில் தான் மாணவர்கள் சே அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். அதிலும் பிசிஏ, பிபிஏ, கம்ப்யூட்டர் சயின்ஸ், பிகாம் உள்ளிட்ட படிப்புகளை தான் அதிகம் தேர்வு செய்கிறார்கள்.

இந்த நிலையில் முன்பு எப்போதும் இல்லாத விதமாக தமிழகம் முழுவதும் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் பிஎஸ்சி கணிதம் படிப்பில் மிக குறைவான அளவிலேயே மாணவர்கள் சேர்ந்துள்ளார்கள். இதனால் தமிழகத்தில் உள்ள 10 கல்லூரிகள் பிஎஸ்சி கணிதம் படிப்பை தூக்கி உள்ளன. தற்போது வரை 51 அரசு கல்லூரிகளில் வெறும் ஒற்றை இலக்கத்தில் தான் பிஎஸ்சி கணித படிப்பில் மாணவர்கள் சேர்ந்துள்ளார்கள். இதில் நான்கு கல்லூரிகள் ஒரு மாணவன் கூட பிஎஸ்சி கணிதத்தில் சேரவில்லை என்பது தான் வேதனையான விஷயம்.

இது அரசு கல்லூரிகள் மட்டுமல்ல தனியார் கல்லூரிகளிலும் இந்த நிலைமைதான். இந்த நிலைமை தமிழகத்திற்கு மிகப்பெரிய ஆபத்தாக அமைந்து விடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அதாவது பிஎஸ்சி கணிதத்தை யாரும் படிக்க முன்வராவிட்டால் பள்ளி கல்லூரிகளில் கணித ஆசிரியர்களுக்கு பெரிய அளவில் பற்றாக்குறை ஏற்படும். ஆசிரியர்கள் இல்லாமல் போனால் எதிர்கால தலைமுறையினருக்கு வேலை கிடைப்பதில் சிரமம் ஆகிவிடும். வருங்காலத்தில் அறிவியலாளர்களும், விஞ்ஞானிகளும் உருவாவது குறையும் என்று எச்சரித்துள்ளனர்.