தமிழகத்தில் மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிவடைந்த தற்போது வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் அறிவியல் பாடம் குறித்து ஒரு அச்சம் இருந்து வருகிறது. ஏனெனில் பத்தாம் வகுப்புக்கு புதிய பாடத்திட்டம் 2019 20ம் கல்வியாண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. அறிவியல் பாடத்தின் புதிய வினாத்தாள் வடிவமைப்பு மாணவர்களை பெரிதும் அச்சத்தை உண்டாக்கியுள்ளது என்றே கூறப்படுகிறது. பொதுவாக அனைத்து பாடங்களிலுமே குறைந்தபட்ச 35 மதிப்பெண்கள் எடுத்தாலே தேர்ச்சி என்ற சூழலில் அறிவியல் பாடத்தில் மட்டும் இது வேறு வேறு மாதிரியாக இருக்கிறது.

அதாவது அறிவியலில் 35 மதிப்பெண் பெற்றாலும் கூட theory யில் 20 மதிப்பெண் பெறாவிட்டால் பெயிலாக கூடிய சூழ்நிலையை மாணவர்கள் எதிர்கொண்டு வருகிறார்கள். இதனால் மாணவர்கள் அறிவியல் தேர்வு என்றாலே பயத்தோடு எதிர்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பத்தாம் வகுப்பு மாணவர்கள் இந்த வினாத்தாள் வடிவமைப்பை பழைய முறையிலேயே கொண்டு வரவேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில் மாணவர்களுடைய நலனைக் கருத்தில் கொண்டு தேரியில் 20 மதிப்பெண்கள் எடுத்தால் தான் தேர்ச்சி என்று முறையை நீக்குவது குறித்தும், ஏழு மதிப்பெண் வினாக்களை ஐந்து மதிப்பெண்ணாக மாற்றுவதோடு இரண்டு மதிப்பெண் வினாக்களை அதிகரிப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த விஷயத்தில் தங்களுக்கு ஒரு நல்ல குட் நியூஸ் வரும் என்று மாணவர்கள் எதிர்பார்த்து காத்துள்ளார்கள்.