அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகின்ற ஜனவரி 22ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்க நாடு முழுவதும் ஆளும் கட்சி பிரமுகர்கள் மற்றும் முக்கியமானவர்களுக்கு அழைப்பிதழ்கள் விடுக்கப்பட்டுள்ளன. கருவறையின் பிரதான வாயில் கதவு நேற்று முன்தினம் பொருத்தப்பட்ட நிலையில் இந்த கதவு 12 அடி உயரத்தில் எட்டு அடி அகலத்தில் தேக்கு மரத்தில் செய்யப்பட்டு தங்கு தகடுகளால் பொருத்தப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களில் மேலும் 13 தங்கம் கதவுகள் பொருத்தப்பட உள்ளன. தங்க கதவுகள் அனைத்துமே கருவறை இருக்கும் மேல் தளத்தில் பொருத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கோவில் முழுவதும் மொத்தம் 46 கதவுகள் பொருத்தப்பட உள்ளன. இதில் 42 கதவுகள் 100 கிலோ தங்கத்தில் செய்யப்பட்டுள்ளது. இந்த கதவுகள் அனைத்துமே தங்க தகடுகளால் பொருத்தப்பட்டுள்ளது. ராமர் கோவிலில் பொருத்துவதற்காக 2400 கிலோ இடையில் ராட்சத மணி தயாரிக்கப்பட்டுள்ளது. எட்டு உலோகங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த மணி உத்திர பிரதேசத்தின் எட்டாம் மாவட்டத்தில் உள்ள சராசர் என்ற இடத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆறு அடி நீளம் கொண்டது. இதுதான் நாட்டிலேயே மிகப் பெரிய மணி ஆக பார்க்கப்படுகின்றது. இதில் மணி அடித்தால் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு கேட்கும் எனவும் சொல்லப்படுகிறது.