இந்தியாவுக்கு எதிராக நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ள ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடருக்கான ஆஸ்திரேலியா அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

18 பேர் கொண்ட குழுவிற்கு பேட் கம்மின்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆஷ்டன் அகர், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் க்ரீன் உள்ளிட்டோரும் ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்துள்ளனர்.

இந்திய சுற்றுப்பயணத்திற்கான ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி :

பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஆஷ்டன் அகர், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், லான்ஸ் மோரிஸ், டாட் மர்பி, மேத்யூ ரென்ஷா, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஸ்வெப்சன், டேவிட் வார்னர்.