இந்தியாவில் வறுமை கோட்டுக்கு கீழ் வசிக்கும் மக்களுக்காக மத்திய அரசு இலவச ரேஷன் வழங்கும் திட்டத்தை 2023-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ரேஷன் உதவி பெறுவதற்கு சில முக்கியமான விதிமுறைகள் இருக்கிறது. அதாவது நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள் இலவச ரேஷன் அரிசியை பெறக் கூடாது. ஒருவேளை நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள் இலவச ரேஷன் அரிசியை வாங்குவது தெரிய வந்தால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோன்று 100 மீட்டர் சதுர அளவில் சொந்த மனை அல்லது வீடு வைத்திருப்பவர்களும் இலவச ரேஷன் அரிசியை பெறுவதற்கு தகுதியற்றவர்கள் தான். அதன் பிறகு கிராமங்களில் டிராக்டர்கள் வைத்திருப்பவர்கள், ஆயுத உரிமை வைத்திருப்பவர்கள் இலவச ரேஷன் அரிசியை பெறுவதற்கு தகுதியற்றவர்கள்.

கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கும் மேலிருந்தால் அவர்கள் இலவச ரேஷன் அரிசியை பெறக் கூடாது. இதேபோன்று நகர்புறங்களில் வசிப்பவர்களுக்கு ஆண்டு வருமான 3 லட்சத்திற்கும் மேல் இருந்தால் அவர்களும் இலவச ரேஷன் அரிசியை பெறுவதற்கு தகுதியற்றவர்கள்தான். மேலும் நாட்டில் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்கள் பயனடைய வேண்டும் என்பதற்காகவே இலவச ரேஷன் அரிசி திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில் வசதி படைத்த சிலர் இலவச ரேஷன் அரிசி திட்டத்தில் பயன்பெறுவதால் தகுதியானவர்களுக்கு உதவி கிடைக்காமல் போய்விடுகிறது. இதனால்தான் இந்தியாவில் சில மாநிலங்களில் இது போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கிறது.